தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணம் உயர்கிறதா? - போக்குவரத்துத் துறை விளக்கம்

அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக எந்த கொள்கை முடிவும் எடுக்கப்படவில்லை என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் விரைவில் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த நிலையில் அதற்கு போக்குவரத்துத் துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விளக்கத்தில், "தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக எந்த கொள்கை முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால், பேருந்து கட்டணம் உயர்வு குறித்த தகவல்கள் வெறும் வதந்தியே. பொதுமக்கள் அதிகாரபூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பேருந்து கட்டண மாற்றம் தொடர்பாக அரசு எந்த முடிவையும் எடுத்தால், அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. நாள்தோறும் அரசு பேருந்துகளை நம்பி பயணிக்கும் லட்சக்கணக்கான மக்களிடையே பரவியிருந்த குழப்பத்திற்கு இந்த விளக்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com