அரசுப் பள்ளிகள் உங்களின் விளம்பரக் கூடமா முதல்-அமைச்சரே? - நயினார் நாகேந்திரன்

தவெகவினரோ அரசுப் பள்ளியை நாடக மேடையாகவே மாற்றி சூட்டிங் நடத்துகின்றனர் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

விளம்பரம் தேடுவது நியாயமா

உத்திரமேரூர் தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ்சும் ஆச்சரியக்குறிகள் சிலரும் அரசுப் பள்ளி ஒன்றில் புகுந்து உங்களின் புகைப்படத்தை மாட்டி ரீல்ஸ் எடுத்து, படிக்கும் பிள்ளைகளின் நேரத்தை வீணடித்த செய்தியை அறிவீர்களா? அல்லது, தவெகவினர் அரசுப் பள்ளிகளில் கேக் வெட்டுவதும் ஆய்வு என ரீல்ஸ் எடுப்பதும் வழக்கம் தானே என இதையும் கடந்து விட்டீர்களா?

தீய சக்தி திமுகவினர் அரசுப் பள்ளிகளில் நாடக முகாம் நடத்தி பிள்ளைகளின் கல்வியைச் சீரழித்தனர். "தூய சக்தி" தவெகவினரோ அரசுப் பள்ளியை நாடக மேடையாகவே மாற்றி சூட்டிங் நடத்துகின்றனர். இது தான் மாற்றமா ஜோசப் விஜய்யே? ஏழை எளிய மாணவர்களுக்கு நல்ல பள்ளிக்கூடமும் தரமான கல்வியும் வழங்குவதை விடுத்து, சிறுபிள்ளைத்தனமாக ரீல்ஸ் எடுத்து விளம்பரம் தேடுவது நியாயமா bro?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com