திருப்பரங்குன்றம் தவிர வேறு பிரச்சினை இல்லையா? மனுதாரர் மீது நீதிபதிகள் காட்டம்

அரசியல் லாபம் அடைய, இதையே வேலையாக வைத்துள்ளீர்கள் என்று மனுதாரரை நீதிபதிகள் காட்டமாக சாடினர்.
திருப்பரங்குன்றம் தவிர வேறு பிரச்சினை இல்லையா? மனுதாரர் மீது நீதிபதிகள் காட்டம்
Published on

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கோரி கேகே ரமேஷ் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், அரசியல் லாபம் அடைய, இதையே வேலையாக வைத்துள்ளீர்கள் என்றும், நீதிமன்றத்திற்கு வேறு வேலை இல்லையா?" என காட்டமாக கேள்வி எழுப்பியதோடு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து மனுதாரர் கே கே ரமேஷ் "இனி இதுபோன்று மனுத்தாக்கல் செய்ய மாட்டேன்" என உறுதி அளித்தார். இதையடுத்து ரூ.50,000 அபராதம் விதித்த நீதிபதிகள், இனி இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்ய மாட்டேன் என உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com