பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல தயாரா? ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!

பண்டிகை காலங்களில் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல தயாரா? ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்!
Published on: 

சென்னை,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக ரெயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 13) தொடங்குகிறது. இதனால் வெளியூர்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

டிக்கெட் முன்பதிவு

இந்திய ரெயில்வேயில் தற்போது நடைமுறையில் உள்ள 60 நாட்களுக்கு முன்பான டிக்கெட் முன்பதிவு முறையின்படி, பயணிகள் தங்களது பயண தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பே ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அந்த வகையில், பொங்கல் பண்டிகை அடுத்தாண்டு ஜனவரி 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஜனவரி 12-ந்தேதி ரெயிலில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் இன்று (நவம்பர் 13) காலை 8 மணி முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பயணிகள் ஆர்வம்

பொங்கல் பண்டிகை காலங்களில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.

இதனால் பண்டிகை காலங்களில் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். கடைசி நேர நெரிசலை தவிர்க்கும் வகையில், பயணிகள் இன்று முதலே தங்களுக்குத் தேவையான ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

X