த.வெ.க.வினரின் அடாவடி நடவடிக்கைகள் குறித்து எதுவும் தெரியாது என கூறுவதா..? - ஐகோர்ட்டு காட்டம்


த.வெ.க.வினரின் அடாவடி நடவடிக்கைகள் குறித்து எதுவும் தெரியாது என கூறுவதா..? - ஐகோர்ட்டு காட்டம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 3 Oct 2025 1:33 PM IST (Updated: 3 Oct 2025 1:46 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் த.வெ.க. மாவட்ட செயலாளர் சதீஷ் குமாருக்கு முன் ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

மதுரை

கரூர்,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இச்சம்பவம் தொடர்பாக கரூர் டவுன் போலீசார் த.வெ.க. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (வயது 49), பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் மற்றும் சிலர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் கடந்த 29-ந்தேதி திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள கிராமத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதனிடையே கரூருக்கு முன்னதாக விஜய் நடத்திய நாமக்கல் பிரச்சார கூட்டத்திலேயே அசாதாரண சூழல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டனர் என்று நாமக்கல் போலீசார் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக நாமக்கல் போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். அதில் தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், மாவட்டச் செயலாளர் சதிஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளின் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான பொதுநல வழக்குகள் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் சென்னை ஐகோர்ட்டு மதுரை அமர்வில் இன்று (03.10.2025) விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “தவெகவினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் எதுவும் தெரியாது என கூறுவதா?.. கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? என்று கூறி முன்ஜாமின் கோரிய நாமக்கல் மாவட்ட தவெக செயலாளர் சதீஷ்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

முன்னதாக வழக்கு விசாரணையின்போது, 'த.வெ.க.வினர் செயல்பாடுகளால் ரூ. 5 லட்சம் வரை சேதம் ஏற்பட்டுள்ளது என்றும், நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ் மீது மேலும் 8 வழக்குகள் பதியப்பட்டுள்ளன' என போலீசார் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

1 More update

Next Story