’புதிய கட்சி தொடங்குகிறேனா?’ - ச‌சிகலா பரபரப்பு பேட்டி

நாளை முக்கிய முடிவு எடுக்கப்படும் என சசிகலா கூறினார்.
’புதிய கட்சி தொடங்குகிறேனா?’ - ச‌சிகலா பரபரப்பு பேட்டி
Published on

சென்னை,

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், பசும்பொன்னில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவற்றை சசிகலா நடத்த உள்ளார். அப்போது அவர் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படு வருகிறது.

இந்த நிலையில், அண்ணா, எம்ஜிஆர், ஜெயல‌லிதா ஆகியோரின் நினைவிடங்களில் சசிகலா இன்று மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதிய கட்சி தொடங்குகிறீர்களா? என்று சசிகலாவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது;

”நாளை பசும்பொன்னில் அம்மா பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளோம். நாளை அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். நாளை நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும், நல்ல தகவலை சொல்கிறேன்" இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com