

சென்னை,
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் நாளை மறுதினம் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“சென்னையில் 05.08.2026 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
பெரம்பூர்: திருமலை நகர் பிரதான சாலை, திருமலை நகர் 1 வது முதல் 3வது தெரு வரை மற்றும் விரிவாக்கம்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.