

சென்னை,
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் ஒரு சில பகுதிகளில் நாளை மறுநாள்(22-ந்தேதி) மின்தடை ஏற்பட உள்ளதாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“சென்னையில் 22.08.2026 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
பூவிருந்தவல்லி : சென்னீர்குப்பம், கரையான்சாவடி, துளசி தாஸ் நகர், சின்ன மாங்காடு,குமணன்சாவடி.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.