சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மின் தடை
Published on

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னையில் 25.06.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின்தடை ஏற்படும் இடங்கள்

திருநீர்மலை : தேரடி தெரு, கிழக்கு மற்றும் தெற்கு மாட தெரு, குளக்கரை தெரு, வி.ஜி.என். மகாலட்சுமி நகர், திருநீர்மலை பிரதான சாலை, வேம்புலி அம்மன் கோயில் தெரு, பஜனை கோவில் தெரு, மல்லிமா வீதி, சிவராஜ் தெரு, ஒய்யாளியம்மன் கோயில் தெரு, வைத்தியகார தெரு, மேட்டு தெரு, ஜெகஜீவன் ராம் தெரு, சர்வீஸ் சாலை, காந்தி தெரு.

திருமுடிவாக்கம்: எம்கேபி நகர் ,மகளிர் தொழிற்பேட்டை பூங்கா , திருநீர்மலை பிரதான சாலை, பெருமாள் நகர் ,ஸ்ரீ கிருஷ்ணா நகர் ,வழுதலம்பேடு, மைக்ரோ எஸ்டேட், பாம் ரிவியரா அபார்ட்மெண்ட், அமர்பிரகாஷ் அபார்ட்மெண்ட், குன்றத்தூர் , குமரன் நகர் , மகாலட்சுமி கூட்டுறவு சங்கம் , பிகேவி மஹா நகர் , கலைமகள் நகர், கற்பகம் நகர் , டசியோவா தொழிற்பேட்டை பூங்கா.

ஐயப்பன்தாங்கல்: பிரின்ஸ் ஹைலேன்ட் அபார்ட்மெண்ட், துலிவ் தக்ஷின் அபார்ட்மெண்ட், சுப்பையா நகர், பாலாஜி அவென்யூ, பத்மாவதி நகர், சுப்பிரமணி நகர், கருமாரி அம்மன் நகர்.

அண்ணாசாலை: 15 முதல் 24 வரை பூத பெருமாள் தெரு, ஓயிட்ஸ் ரோடு, 756 முதல் 760 வரை அண்ணாசாலை, ஜசிஜசிஜ வங்கி, ஜடிசிஒட்டல், வாசன் அவுன்யு, ஆனந்த விகடன் பத்திரிக்கை, 106 முதல் 120 வரை அண்ணாசாலை. ராகேஜா டவர், 40 முதல் 68 வரை ஜி.பி.ரோடு, சத்தியமூர்த்திபவன், 1 முதல் 7 வரை, கிளப் அவுஸ் ரோடு, பட்டுலால்ஸ் ரோடு, 148 முதல் 152 வரை அண்ணாசாலை, எக்ஸ்பிரஸ் அவுன்யு எஸ்டேட் 799 கலைக்கல்லூரி, லிங்க் ரோடு 2 முதல் 29 வரை மற்றும் 22 முதல் 78 வரை வி.சி.ரோடு, இந்தியன் வங்கி, 29 காஞ்சி ஒட்டல், 4. இரயில் கட்டிடம், எத்திராஜ் கல்லுாரி, ராணி மெய்யம்மை ஹாஸ்டல் மற்றும் கல்யாணமண்டபம் 766 முதல் வரை அண்ணாசாலை, ஏர் இந்தியா, 21, 64, முதல் 125 ஏ வரை, மார்ஷல்ரோடு, 7 மாண்டியத்லேன், 47,(எல்&டி) 50,மாண்டியத் கனரா வங்கி, கன்னிமராஒட்டல், ஜ.ஒ.பி. தாஜ் ஒட்டல் 11 முதல் 14 வரை மற்றும் 1 22 வரை வுட்ஸ் ரோடு, பி.ஆர். காம்பளக்ஸ்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com