சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
நாளை மின் தடை
Published on

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னையில் 06.06.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின் தடை ஏற்படும் இடங்கள்

சோத்துப்பெரும்பேடு: குமரன் நகர், செங்கலம்மன் நகர், விஜயநல்லூர், சிறுணியம், பார்த்தசாரதி நகர், விஜயா கார்டன்.

பல்லாவரம்: பழைய சந்தை, பம்மல் பிரதான சாலை, அப்துல் பாரூக் தெரு, காமராஜர் நெடுஞ்சாலை, தெய்வசிகாமணி தெரு, முத்தமிழ் நகர், கிருஷ்ணா நகர், அரங்கநாதன் தெரு, தேவராஜன் தெரு, சோழன் தெரு, இஸ்ரோ விருந்தினர் மாளிகை , ரேடியன்ஸ்.

பஞ்செட்டி: தேர்வாய்கண்டிகை, சிப்காட், கோபால் ரெட்டி, பொள்ளனூர், புதுநகர், கரடிபுத்தூர், புத்தூர், என்.எம். கண்டிகை, கண்ணன்கோட்டை, பாஞ்சாலை, அமரம்பேடு, அக்ரஹாரம், தாணிப்பூண்டி, பெரியபுலியூர், சிறுவாடா, பூவலம்பேடு.

தில்லை கங்கா நகர்: சரஸ்வதி நகர், கல்கி நகர், விநாயகபுரம், ஏஜிஎஸ் காலனி 4வது முதல் 10வது பிரதான சாலைகள் வரை, ஆண்டாள் நகர் 2வது மற்றும் 3வது பிரதான சாலைகள், எஸ்தெல் ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்புகள், டிஆர்ஏ சல்மா அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ரெடிங்டன்.

ராமாபுரம்: ஐ.பி.எஸ் காலனி, மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பக்கம், ராமச்சந்திர நகர், கெருகம்பாக்கம், நெசப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com