

சென்னை,
தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னையில் 31.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
வேளச்சேரி: டி.ஏ. கோவில், காந்தி சாலை, கோகிலம் தெரு, நியூ காலனி, கபாலி தெரு, ஆண்டாள் அவென்யூ, சோனி நகர், புறவழி பிரதான சாலை , லட்சுமி நகர் 1 வது முதல் 8வது தெருக்கள் வரை, வடுவாம்பாள் நகர், எம்.ஜி.ஆர். நகர் 1 வது முதல் 10வது தெருக்கள் வரை.
அடையாறு: வெங்கடேஸ்வரா நகர் 1 வது முதல் வது தெருக்கள் வரை, ஜீவரத்தினம் நகர் 1 வது மற்றும் 2ஆம் தெருக்கள், கற்பகம் கார்டன் 1 வது முதல் 7 வது குறுக்குத் தெருக்கள் மற்றும் 1 வது பிரதான சாலை, பெசன்ட் நகர் பென்கோ காலனி, பீச் ஹோம் அவென்யூ, சி.பி.டபிள்யூ பழைய குடியிருப்புகள், 4வது அவென்யூ, சுங்கத்துறை காலனி, தாமோதரபுரம்.
பல்லாவரம்: காந்தி சாலை, காமாட்சி நகர், அலிக்விப்பா நகர், ஏ.ஆர்.ஜி. நகர், மகாலட்சுமி சாலை, ஜெயலட்சுமி நகர், பிராமின் தெரு.
திருவான்மியூர்: சாஸ்திரி நகர் திருவள்ளுவர் சாலை, 1 வது முதல் 4 வது கிழக்கு தெருக்கள், வால்மீகி தெரு, சிவசுந்தரா அவென்யூ 1 வது மற்றும் 2 வது தெருக்கள், கலாக்ஷேத்ரா சாலை, பாலு அவென்யூ.
நசரத்பேட்டை: மெட்ரோ வாட்டர் உயர் மின் அழுத்த மின் இணைப்பு 661, மடவிளாகம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.