

திருச்சி,
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பாலகிருஷ்ணம்பட்டி மற்றும் தங்க நகர் துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பெரிய கல்லாங்குத்து, நெட்டவேலம்பட்டி, ஆர்.கோம்பை, வைரபெருமாள் பட்டி, பச்ச பெருமாள்பட்டி, செங்கல்பட்டி, அரப்புளிபட்டி, தங்கநகர், ஆ.கல்லாங்குத்து. கருப்பம்பட்டி, சீத்தக்காடு, எ.பாதர்பேட்டை, ஆலத்துடையான்பட்டி, சிறுநாவலூர், கட்டப் பள்ளி, ரெட்டியாப்பட்டி, எஸ்.என்.புதூர், சாலக்காடு, அழகாபுரி, வேலம் பட்டி, கோம்பை, கோனேரிப்பட்டி, கீழப்பட்டி, வடக்குப்பட்டி, வெங்கட்டம் மாள் சமுத்திரம், ஆங்கியம் பாலகிருஷ்ணம்பட்டி, பி.மேட்டூர், கல்லாத்துக் கோம்பை, பெரியசாமி கோயில், புளியஞ்சோலை, விஸ்வாம்பாள்சமுத்திரம் வடக்கு, தெற்கு, கோட்டப்பாளையம், மாராடி, வலையப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை துறையூர் கோட்ட மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.