சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
Published on

சென்னை,

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி சென்னையில் நாளை (01.07.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன் விபரம்;

கொட்டிவாக்கம்:

சாஸ்திரி நகர், வால்மீகி நகர், 2வது சீவார்டு சாலை முதல் 4வது சீவார்டு சாலை வரை, பாலகிருஷ்ணன் சாலை, கே.கே. சாலை, ராஜா ரங்கசாமி அவென்யூ, சுப்பிரமணியம் அவென்யூ, திருவள்ளுவர் நகர் 7வது முதல் 33வது குறுக்குத் தெருக்கள் வரை, திருவள்ளுவர் நகர் 1 மற்றும் 3 முதல் 6வது பிரதான சாலைகள் வரை, 1 மற்றும் 3வது அவென்யூ, வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் எச்12 முதல் எச்40 மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com