அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.39 கோடி மின் கட்டணம் பாக்கி

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.39 கோடி மின் கட்டணம் பாக்கியை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.39 கோடி மின் கட்டணம் பாக்கி
Published on

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களுக்குட்பட்ட மின்சார இணைப்புகளில் மின் கட்டணம் செலுத்தாமல் தற்போது வரை நிலுவையில் உள்ள தொகை விவரம் வருமாறு:-

மத்திய அரசுத்துறை, மாநில அரசுத்துறை, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டு தொடர்புடைய மின்சார இணைப்புகளில் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த மே மாதம் வரை மின் கட்டண நிலுவைத்தொகையாக ரூ.39 கோடியே 3 லட்சத்து 41 ஆயிரத்து 614 உள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள படி, அனைத்து அரசு துறைகளுக்கும் தனித்தனியே துறை வாரியாக மின்சார இணைப்பு வாரியாக மின்கட்டண நிலுவைக்கான கேட்புச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மிகுந்த நிதி நெருக்கடியில் இருப்பதால் மேற்கண்ட மின் கட்டண நிலுவைத்தொகையினை உடனடியாக செலுத்த வேண்டும். தவிர்க்கும் பட்சத்தில் மின் இணைப்பு துண்டிப்பு செய்ய நேரிடும்.

மேற்கண்ட தகவலை பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com