அரியலூர்: மாணவிகளுடன் பள்ளிக்கு வெளியே நிறுத்தப்பட்ட ஆசிரியர்கள் - தாமதமாக வந்ததால் நடவடிக்கை


அரியலூர்: மாணவிகளுடன் பள்ளிக்கு வெளியே நிறுத்தப்பட்ட ஆசிரியர்கள் - தாமதமாக வந்ததால் நடவடிக்கை
x

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நேரம் தொடங்கியபோது பள்ளியின் நுழைவாயில் மூடப்பட்டது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. பொங்கல் தொடர் விடுமுறை முடிந்து மாணவிகளும், ஆசிரியர்களும் இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், காலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் நேரம் தொடங்கியபோது பள்ளியின் நுழைவாயில் மூடப்பட்டது. இதனிடையே ஏராளமான மாணவிகளும், ஆசிரியர்களும் தாமதமாக வந்ததால் அனைவரும் பள்ளிக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டனர்.

இதன் பின்னர் தலைமை ஆசிரியரின் கண்டிப்புடன் அனைவரும் பள்ளி வளாகத்திற்குள்ளே அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக வந்ததால் மாணவிகளுடன் சேர்த்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

1 More update

Next Story