

அரியலூர்,
அரியலூர் மாவட்டம் தவுத்தாய்குளத்தில் அடுத்தடுத்த கடைகளில் புகுந்து மர்ம நபர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அங்குள்ள டைல்ஸ் கடையின் பின்புறத்தில் இருந்த தகர ஷீட்டை பிரித்து உள்ளே நுழைந்த நபர், கல்லாப்பெட்டியில் இருந்த 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளி குத்துவிளக்கை திருடியுள்ளார்.
மேலும், காவல்துறையிடம் இருந்து தப்புவதற்காக கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் ஹார்டு டிஸ்க்கையும் அவர் எடுத்துச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து அருகில் இருந்த இரும்புக் கடையின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே புகுந்து, 3 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இரண்டு செல்போன்களை திருடிச் சென்றுள்ளார்.
இந்த கொள்ளை சம்பவத்தின் காட்சிகள் அங்கிருந்த மற்றொரு சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன. இதையடுத்து, கடை உரிமையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடனை வலைவீசி தேடி வருகின்றனர்.