அர்ஜுனன் குளத்தை சீரமைக்க வேண்டும்

ஆரணி அருகே அர்ஜுனன் குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அர்ஜுனன் குளத்தை சீரமைக்க வேண்டும்
Published on

ஆரணி

ஆரணி- திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் முள்ளிப்பட்டு ஹவுசிங்போர்டு குடியிருப்பு பகுதி அருகில் அர்ஜுனன் குளம் பாழடைந்து இருந்தது.

இதனை முன்பு இருந்த கலெக்டர் கந்தசாமி, கலெக்டரின் பொது நிதியில் இருந்து குளம் சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதையடுத்து கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டு குளம் சீரமைக்கப்பட்டது.

மேலும் அந்த இடத்தை சுற்றிலும் சிறிய பூங்கா மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம், ஒரு டீ ஸ்டால் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களாக மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்தன.

பின்னர் அந்த பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

அடுத்து வந்த கலெக்டர் இதனை கண்டு கொள்ளாமல் விட்டதால் அர்ஜுனன் குளம் பராமரிப்பின்றி கிடக்கிறது.

எனவே, அர்ஜுனன் குளத்தை இப்போது உள்ள கலெக்டர் சீரமைத்து பழைய கலெக்டரின் கனவை நினைவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com