

சென்னை,
சென்னையில் ஆயுதப்படை போலீஸ் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக, பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக பெரியமேட்டில் உள்ள தனியார் விடுதியில் சுரேஷ் என்ற காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதனைத்தொடர்ந்து காவலர் சுரேஷின் சடலத்தை கைப்பற்றி பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சடலமாக கண்டெடுக்கப்பட்ட சுரேஷ், கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.