ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: செல்வப்பெருந்தகையை நீக்க கோரி ராகுல் காந்திக்கு கடிதம்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: செல்வப்பெருந்தகையை நீக்க கோரி ராகுல் காந்திக்கு கடிதம்
Published on

சென்னை,

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்புள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பான அந்த கடிதத்தில், "பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும். புதிய பாரதம், புதிய தமிழகம், வி.சி.க., பி.எஸ்.பி., கட்சியில் இருந்த பிறகு தான் அவர் காங்கிரசில் இணைந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏன் கைது செய்யவில்லை என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். காங்கிரசில் உள்ளதால் தான் கைதாகவில்லை என்றும் கூறுகின்றனர். அவரை கட்சியில் இருந்து நீக்கினால் தான், மக்கள் மத்தியில் காங்கிரஸ் நிலைத்து இருக்கும்" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com