

குமரி
வங்கியில் பணம் போட்டால் பிரதமர் மோடி எடுத்துவிடுவார் என்று கூறி ராணுவ வீரரிடம் ரூ.8 லட்சம் மோசடி நடந்துள்ளது.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ராணுவ வீரர் ஷாஜி என்பவரின் தந்தைக்கு விபத்து இழப்பீடாக ரூ.8 லட்சம் கிடைத்தது. அந்த பணத்தை வங்கியில் போட்டால் பிரதமர் மோடி எடுத்துவிடுவார் என்றும், தாங்கள் பத்திரமாக வைத்திருப்பதாக கூறியும் நகைக்கடை உரிமையாளர் சுதர்சிங் என்பவர் ஷாஜியின் தாயாரிடம் இருந்து ரூ.6 லட்சமும், மற்றொரு நகைக்கடை உரிமையாளர் சுஜின் ரூ.2 லட்சமும் வாங்கியுள்ளனர்.
இதன் பின்னர் பணத்தை திருப்பி தராமல் இருவரும் ஏமாற்றி உள்ளனர். இதனால், ஷாஜி அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் சுதர்சிங், சுஜின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.