அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

உடுமலை,போடிப்பட்டி,குடிமங்கலத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

உடுமலை

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் உடுமலையிலும் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்கிடவும், ஐந்தாண்டு பணி முடித்த குருமைய ஊழியர்கள், 10 வருடம் பணி முடித்த உதவியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்கிடவும், ஊழியர்கள் இல்லாத அங்கன்வாடி மையங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், ஜி.பி.எப் பிடித்தம் செய்த தொகையை உடனடியாக வழங்கிடவும், ஜி.பி.எப் தொகையில் கடன் வழங்குவதற்கும் ஆவணம் செய்ய வேண்டும், பணியிடங்கள் அதிகமாக உள்ளதால் திட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் உள்ளது.

எனவே காலி பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை யொட்டி உடுமலை போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

குடிமங்கலம்

இதேபோல் குடிமங்கலத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு குடிமங்கலம் ஒன்றிய தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுபான் லீலாள் காளீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொருளாளர் கவிதா, இணைச்செயலாளர் பூபதி, ஒன்றிய துணைத்தலைவர் ஜெயமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போடிப்பட்டி

இதேபோல் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சம்மேளனம் சார்பில் மடத்துக்குளம் நால்ரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஜோதீஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் வெண்ணிலா, அரசு ஊழியர் சங்க மாவட்டப்பொருளாளர் முருகசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தலைவர் சிவக்குமார், செயலாளர் பாலு, சி.ஐ.டி.யூ. சங்கம் வடிவேல், கட்டுமான சங்க செயலாளர் பன்னீர் செல்வம், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் மாசாணம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com