குறைந்த விலையில் தக்காளி விற்க ஏற்பாடு

குறைந்த விலையில் தக்காளி விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
குறைந்த விலையில் தக்காளி விற்க ஏற்பாடு
Published on

தக்காளி உற்பத்தி மற்றும் வரத்து குறைவின் காரணமாக அதன் விலை அதிகரித்து வருகிறது. இந்த திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தற்காலிக விலையேற்றத்தில் இருந்து பொதுமக்களை காக்கவும், விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்து உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ராமநாதபுரம் உழவர் சந்தையில் டான்ஹோடா விற்பனையகம் மூலம் சந்தை விலையை விட குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. ஒருவருக்கு 1 கிலோ வரை தக்காளி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு உழவர் சந்தையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் தக்காளியினை பொதுமக்கள் வாங்கி பயனடையுமாறு கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com