கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி, குட்கா விற்ற 3 பேர் கைது ,சூதாடிய 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி, குட்கா விற்ற 3 பேர் கைது ,சூதாடிய 5 பேர் மீது வழக்கு
Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டு, குட்கா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பணம் வைத்து சூதாடியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

சோதனை

கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பழையபேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை சோதனை செய்தபோது அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து லாட்டரி சீட்டுக்கள் விற்ற பழையபேட்டை பகுதியை சேர்ந்த ஜாகீர் உசேன் (வயது 57) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்றதாக மத்தூர் பகுதியை சேர்ந்த ஜெயகுமார் (33), நடுஜேகிப்பட்டி சீனிவாசன் (33) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சூதாட்டம்

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் பெரியமோட்டூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பெரிய மோட்டூரை சேர்ந்த ராஜ்குமார் (29), தமிழரசன் (29), அசோக்குமார் (30), செவத்தான் (39) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

பேரிகை போலீசார் முதுகுறுக்கி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு 3 பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். ஒருவர் பிடிபட்டார். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த திம்மராயப்பா (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.8 ஆயிரம், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com