கடத்தூரில்கார் டிரைவரை கத்தியால் குத்தியவர் கைது

கடத்தூரில்கார் டிரைவரை கத்தியால் குத்தியவர் கைது
Published on

மொரப்பூர்:

தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் உள்ள மஜித் தெருவை சேர்ந்த சஹபுதீன் மகன் முகமது யூனிஸ் (வயது 27). கார் டிரைவரான இவர் தனது தாயாருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது மாமன் மகள் பர்ஹானா என்பவருக்கும் அவருடைய கணவர் தபாரக் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாம்.

இதையொட்டி கணவர், மனைவியை அடித்து கொண்டிருந்தபோது அதை பார்த்த முகமது யூனிஸ் தடுக்க சென்றார். அப்போது தபாரக் நீ யாருடா தடுப்பதற்கு என தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கத்தியை எடுத்து முகமது யூனிசை குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து முகமது யூனிஸ் கடத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து தபாரக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com