குட்கா, லாட்டரி, கஞ்சா விற்ற 22 பேர் சிக்கினர்

குட்கா, லாட்டரி, கஞ்சா விற்ற 22 பேர் சிக்கினர்
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கேனும் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா?, என போலீசார் சோதனை நடத்தினார்கள். அந்த வகையில் பெட்டி கடை, மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக மத்தூர், பர்கூர், போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி, ஓசூர், மத்திகிரி, பேரிகை, பாகலூர், சூளகிரி, உத்தனப்பள்ளி பகுதியை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 700 மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

அதே போல கஞ்சா வைத்திருந்ததாக மத்திகிரி நவதியை சேர்ந்த நவீன்குமார், சூளகிரி காமராஜ் நகரை சேர்ந்த ராஜா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.600 மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்ததாக சிங்காரப்பேட்டை, பர்கூர், போச்சம்பள்ளி, பாரூர், காவரிப்பட்டணம், ஓசூர் டவுன், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் பகுதிகளை சேர்ந்த 8 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 700 மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.800 பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடியதாக மத்தூர், பர்கூர், நாகரசம்பட்டி, ஓசூர் அட்கோ, சூளகிரி, பாகலூர் பகுதியை சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,300 பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com