ஓசூர் வழியாக நெல்லைக்குகாரில் 143 கிலோ குட்கா கடத்திய டிரைவர் கைது

ஓசூர் வழியாக நெல்லைக்குகாரில் 143 கிலோ குட்கா கடத்திய டிரைவர் கைது
Published on

ஓசூர்:

ஓசூர் வழியாக நெல்லைக்கு காரில் 143 கிலோ குட்கா கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஒரு கார் வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த காருக்குள் 143 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களான ஹான்ஸ், பான்பராக், பான்மசாலா உள்ளிட்டவை இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் ஆகும். இதையடுத்து போலீசார் காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.

கைது

அதில் நெல்லை தாழையத்து பகுதியை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (வயது 36) என்பதும், குட்கா பொருட்கள் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக நெல்லைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார் கார் மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com