நாமகிரிப்பேட்டை அருகேசாராயம் விற்றவர் கைது

நாமகிரிப்பேட்டை அருகேசாராயம் விற்றவர் கைது
Published on

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தொப்பம்பட்டி ஊராட்சி பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையில் போலீசார் தொப்பம்பட்டி பகுதியில் ரோந்து சென்று சோதனை நடத்தினர். அதில் அப்பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் (வயது 35) என்பவருடைய வீட்டை சோதனை செய்தபோது விற்பனைக்காக 40 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நித்தியானந்தத்தை கைது செய்த போலீசார் 40 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com