பள்ளிபாளையம் அருகேகாரில் குட்கா கடத்தியவர் கைது

பள்ளிபாளையம் அருகேகாரில் குட்கா கடத்தியவர் கைது
Published on

பள்ளிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் காவிரி பாலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோட்டில் இருந்து வந்த மாருதி காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 20 பண்டல்கள் இருந்தன. இதையடுத்து காரில் வந்தவரிடம் விசாரித்ததில், அவர் ஈரோடு மாவட்டம் சிவகிரியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 40) என்பதும், பள்ளிபாளையம் பகுதியில் குட்காவை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜெயக்குமாரை கைது செய்த போலீசார் ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மற்றும் மாருதி காரை பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com