லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவர் கைது
Published on

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதாக ராசிபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கட்டனாச்சம்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த விஜய் பிரதாப் (வயது 28) என்பவர் லாட்டரி சீட்டை எழுதி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.250-ஐ பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com