தர்மபுரி அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற டாஸ்மாக் விற்பனையாளர் கைது

தர்மபுரி அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற டாஸ்மாக் விற்பனையாளர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி அருகே பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற டாஸ்மாக் விற்பனையாளர் கைது
Published on

தர்மபுரி அருகே உள்ள அல்லியூர் கிராமத்தை சேர்ந்த 35 வயது பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ராஜூ (வயது 47) என்பவர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இவர் வீட்டில் தனியாக இருந்த 35 வயது பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பெண் மதிகோன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜூவை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com