மாணவியை கடத்திய வாலிபர் கைது

மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மாணவியை கடத்திய வாலிபர் கைது
Published on

ஓமலூர்:

ஓமலூர் அருகே செல்லப்பிள்ளை குட்டை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அந்த மாணவிய காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த மாணவியை தாரமங்கலம் கருக்கல்வாடி பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் கோகுல் கிருஷ்ணன் (வயது 22) என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் கோகுல்கிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com