சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது
Published on

வாழப்பாடி:

அயோத்தியாப்பட்டணம் காரிப்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 19-ந் தேதி மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை தேடி வந்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை அதே பகுதியை சேர்ந்த சம்பத் (வயது 21) என்பவர் திருமண ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதுடன், பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சம்பத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com