எருமப்பட்டியில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஒருவர் கைது

எருமப்பட்டியில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஒருவர் கைது
எருமப்பட்டியில் 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஒருவர் கைது
Published on

எருமப்பட்டி பூசாரி தெருவில் சிலர் ரேஷன் அரிசி மூட்டைகளை சட்டவிரோதமாக விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அந்த பகுதியில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பழனிமுத்து மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 39) என்பவர் 22 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 1,100 கிலோ ரேஷன் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com