எருமப்பட்டி அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபர் கைது

எருமப்பட்டி அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்த வாலிபர் கைது
Published on

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி பொன்னேரி கைகாட்டியில் எருமப்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது முட்டாஞ்செட்டியை சேர்ந்த கனகராஜ் மகன் பிரசன்னா (வயது 21) என்பவர் பொதுமக்களுக்கு இடையூறு செய்தும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்படி நடந்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் எச்சரித்தும் இடையூறு செய்வதை நிறுத்தாததால் பிரசன்னாவை போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com