மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய விவசாயி கைது

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய விவசாயி கைது
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் முத்தம்பட்டி கிராமத்தில் கஞ்சா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முத்தம்பட்டி- கோவிந்தாபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் சாக்குப்பையில் கட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்ததில் அவர் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வாரப்பள்ளம் பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடாசலம் (வயது 55) என்பது தெரியவந்தது. அவர் கிலோ கஞ்சாவை சாக்குப்பையில் கடத்தி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், வெங்கடாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com