கஞ்சா விற்ற 2 சிறுவர்கள் கைது

கஞ்சா விற்ற 2 சிறுவர்கள் கைது
Published on

ஓசூர்:

ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பாரதிதாசன் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற வாலிபர்களை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக ஓசூர் சிப்காட் ஹவுசிங் காலனியை சேர்ந்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com