பேரிகை அருகேஸ்கூட்டரில் குட்கா கடத்தி வந்த வாலிபர் கைது

பேரிகை அருகேஸ்கூட்டரில் குட்கா கடத்தி வந்த வாலிபர் கைது
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே எலுவபள்ளி ஜங்ஷன் பகுதியில் பேரிகை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஸ்கூட்டரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரித்தில் ஸ்கூட்டரில் வந்தவர் சூளகிரி கீழ்தெருவை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 35) என்பதும், கர்நாடக மாநிலம் மாஸ்தியில் இருந்து சூளகிரிக்கு குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ்குமார கைது செய்த போலீசார் ஸ்கூட்டருடன் ரூ.26 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com