பள்ளிபாளையம் அருகேஜவுளி அதிபர் வீட்டு கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது

பள்ளிபாளையம் அருகேஜவுளி அதிபர் வீட்டு கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது
Published on

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. ஜவுளி அதிபர். இவருடைய வீட்டில் கடந்த நவம்பர் மாதம் ரூ.28 லட்சம், 18 பவுன் நகைகள் கொள்ளை போனது. இந்த சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையில் தொடர்புடைய 21 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் கொள்ளை வழக்கில் தொடர்புடையதாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 31) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com