வெண்ணந்தூர் அருகேசிறுமிகளிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளி கைது

வெண்ணந்தூர் அருகேசிறுமிகளிடம் தவறாக நடக்க முயன்ற தொழிலாளி கைது
Published on

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அருகே உள்ள தொட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 43). கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த 11 வயது சிறுமி மற்றும் 10 வயது சிறுமியிடமும் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமியின் தாய் வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வெள்ளையனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com