கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது
Published on

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே உள்ள நாகனம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பென்னாகரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நாகனம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே ஊரை சேர்ந்த இடும்பன் மகன் செல்வன் (வயது 33) என்பவர் கவரில் வைத்து கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் செல்வத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com