கோட்டப்பட்டி அருகேவிற்பனைக்காக சாராயம் பதுக்கியவர் கைது

கோட்டப்பட்டி அருகேவிற்பனைக்காக சாராயம் பதுக்கியவர் கைது
Published on

அரூர்:

தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக கோட்டப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சிட்லிங் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குறவன் கோவில் அருகே உள்ள ஒரு வீட்டின் பின்பகுதியில் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாலகிருஷ்ணன் (வயது 50) என்பவர் விற்பனைக்காக சாராய பாக்கெட்டுகளை பதுக்கி இருப்பது உறுதியானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோட்டப்பட்டி போலீசார் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com