சாராயம் கடத்தியவர் கைது

சாராயம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
சாராயம் கடத்தியவர் கைது
Published on

நாகை மாவட்டத்தில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகூர் அருகே பனங்குடி- நரிமணம் சாலையில் நேற்று முன்தினம் இரவு நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த வில்லியம்ஸ் மகன் ஜெல்சன் (வயது20) என்பதும், சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் கடத்தி வரப்பட்ட 110 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com