சிறுவன் உள்பட 2 பேர் மீது தாக்குதல்; இருவர் கைது

சிறுவன் உள்பட 2 பேர் மீது தாக்குதல்; இருவர் கைது
Published on

ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே உள்ள மஞ்சளகிரியை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான கோவிந்தராஜ் (28) என்பவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சிறுவனும், அவருடைய தந்தையும் தாக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி கோவிந்தராஜ், வரதராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அதேபோல் வரதராஜ் மற்றொரு புகார் கொடுத்துள்ளார். அதில் தான் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com