

காரிமங்கலம்:
காரிமங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பெற்றேர் மற்றும் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். அதில் தங்களது மகளை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே மிட்டஅள்ளி பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் தம்பிதுரை (32) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என தெரிவித்திருந்தனர்.
அதன்பேரில் காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருவரையும் மீட்டனர். இதையடுத்து கல்லூரி மாணவியை கடத்திய தம்பிதுரையை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவியை கோர்ட்டு உத்தரவுபடி காப்பகத்தில் சேர்த்தனர்.