பொம்மிடி அருகேதொழிலாளியை கல்லால் தாக்கிய மனைவி கைது

பொம்மிடி அருகேதொழிலாளியை கல்லால் தாக்கிய மனைவி கைது
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி அடுத்த நத்தமேடு அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருக்கு ராஜேஸ்வரி (35) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் சக்திவேல் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த 22-ந் தேதி இரவு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஸ்வரி கணவன் என்றும் பாராமல் தகாத வார்த்தையால் திட்டி, கையால் அடித்து கீழே தள்ளினார். மேலும் கல்லால் தாக்கியதில் சக்திவேலுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சக்திவேல் பொம்மிடி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் ராஜேஸ்வரியை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com