கோவில் திருவிழாவில் தகராறு; 2 பேர் கைது

கோவில் திருவிழாவில் தகராறு; 2 பேர் கைது
Published on

ஓசூர்:

பேரிகை அடுத்த அத்திமுகம் முனீஸ்வரன் கோவில் திருவிழா கடந்த 28-ந் தேதி நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த வினய் தேஜா (வயது 22), வினோத் குமார் (26) ஆகியோர் திருவிழாவில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேசினர். இதுகுறித்து அப்பகுதியினர் கண்டித்தும் கேட்கவில்லை. மேலும் இதுகுறித்து தட்டிகேட்ட அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜூ (28), முரளி மோகன் (42) ஆகிய இருவரை தாக்கினர். இதில் படுகாயமடைந்த இருவரும் ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கோவிந்தராஜூ கொடுத்த புகாரின்பேரில் பேரிகை போலீசார் வினய் தேஜா, வினோத்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com