காரிமங்கலம் பகுதியில்மது விற்ற பெண் உள்பட 7 பேர் கைது

காரிமங்கலம் பகுதியில்மது விற்ற பெண் உள்பட 7 பேர் கைது
Published on

காரிமங்கலம்:

காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் காரிமங்கலம், பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி ஏ.சப்பானிபட்டி, பேகாரஅள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தீவிர சோதனை நடத்தினர். அதில் சட்டவிரோத மது விற்பனை செய்த தனலட்சுமி (வயது 38), நடராஜன் (60), பழனி (58), மணிகண்டன் (22), முருகன் (45), சக்திவேல் (55), முருகன் (52) ஆகிய 7 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 110 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com