மனைவியை தாக்கிய தொழிலாளி கைது

மனைவியை தாக்கிய தொழிலாளி கைது
Published on

ராயக்கோட்டை:

ராயக்கோட்டை அருகே உள்ள பால்னாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி முருகம்மாள் (40.) ராஜாவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ராஜா மதுகுடித்து விட்டு வந்து மனைவி முருகம்மாளை அடித்து உதைத்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக அவரது மகன் சக்திவேல் ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ராஜாவை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com