சில்லி கடைக்காரர் மீது தாக்குதல்; தொழிலாளி கைது

சில்லி கடைக்காரர் மீது தாக்குதல்; தொழிலாளி கைது
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பையர்நத்தம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 39). இவர் பொம்மிடி வடசந்தையூரில் சில்லிகடை வைத்துள்ளார். இந்த நிலையில் துரிஞ்சிபட்டி ஜெயந்தி காலனியை சேர்ந்த தொழிலாளி செல்லதுரை (33) என்பவர் சில்லிகடைக்கு வந்து நான் கேட்பதை எப்போதும் வேண்டும் என கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதை தட்டி கேட்ட சதீசை தகாத வார்த்தையால் திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சதீஷ் கொடுத்த புகாரின்பேரில் பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து செல்லதுரையை கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com