பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில்மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில்மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி பேலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, ரவிச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், இ.பி.அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது வெங்கடசமுத்திரம் 4 ரோடு வழியாக மொபட்டில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் பாப்பிரெட்டிபட்டி செங்கல்பட்டியை சேர்ந்த செல்வகுமார் (வயது 35) என்பதும், சந்துக்கடையில் விற்பனை செய்ய 150 மதுபாட்டில்களை வாங்கி சென்றதும் தெரியவந்தது.

இதேபேல் ராமியம்பட்டி பகுதியில் மது விற்ற கஸ்தூரி என்பவரிடம் இருந்து 97 மதுபாட்டில்களும், பாப்பிரெட்டிப்பட்டி- மெணசி சாலையில் இ.பி.அலுவலகம் பின்புறம் மது விற்ற கள்ளியூரை சேர்ந்த செல்வம் (55) என்பவரிடம் இருநது 25 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com